"விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ்" - தேனி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு

"விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ்" - தேனி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு

"விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ்" - தேனி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு
Published on

விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தேனி போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வமும் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரையும் அனல் பறக்கிறது.

இந்நிலையில் தேனியில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், “விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ். பன்னீர்செல்வம் தியாகி அல்ல. எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என அறிவித்த புத்திசாலி. வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அதிமுக நாடகம் நடத்துகிறது.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துவிட்டு சென்றால் திமுகவிற்கு நல்லதுதான். மோடி பரப்புரைக்கு வந்து சென்றால் தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என ஓபிஎஸ் பேசுகிறார். உலகமகா நடிப்பு நடிக்கிறார் ஓபிஎஸ். ஜல்லிக்கட்டு மீண்டும் வர இளைஞர்களே காரணம். அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. இளைஞர்கள் நடத்திய போராட்டத்தினால்தான் ஜல்லிக்கட்டு வந்தது. அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.

கருத்துக்கணிப்புகள் நாம்தான் வெற்றி பெறுவோம் என சொல்கிறது. அதனால் நாம் தோய்ந்துவிடக்கூடாது. ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறக்கூடாது. அவ்வாறு வெற்றி பெற்றால் அவர் பாஜக எம்.எல்.ஏவாத்தான் இருப்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com