சந்திரசேகர் ராவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு !

சந்திரசேகர் ராவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு !
சந்திரசேகர் ராவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு !

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 5 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசினார். திருவனந்தபுரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

தேர்தல் தொடங்கியதற்கு பின், காங்கிரஸ் பாஜக அல்லாத முதல் தலைவரை சந்திரசேகர் ராவ் தற்போது சந்திக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி அமைய பல மாநில தலைவர்களை சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளார் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி மே 13-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினையும், சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் நேரம் ஒதுக்கவில்லை என திமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் "சந்திரசேகர ராவை சந்திக்க நேரம் ஒதுக்காத திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவை வரவேற்கிறேன். மூன்றாவது அணிக்கான முயற்சி பாஜகவுக்கு ஆதரவாக சென்றுவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com