திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்க பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்த்ல தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, திருச்சியில் 11-வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. இதையடுத்து சிறுகனூரில் 700 ஏக்கரில், திமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தனர். தற்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு, பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் பேர் வரை அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கிறார். கொடிக்கம்பத்தில் இருந்து மேடை வரை தொண்டர்களுக்கு நடுவே ஸ்டாலின் நடந்து செல்லும் வகையில், நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கின்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com