டிரெண்டிங்
“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி
“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி
திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார் ஸ்டாலின். இந்தப் பயணத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி சென்ற அவர், அங்குள்ள ராஜாஜியின் நினைவில்லத்துக்குச் சென்றார். அங்கு ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வணக்கம் கூறி ஸ்டாலின் உரையைத் தொடங்கினார். அப்போது திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் என்று அவர் கூறினார்.