சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா, மற்றும் கனிமொழி இன்று சென்னை திரும்பினர். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ஆ.ராசா மற்றும் கனிமொழி சந்தித்தனர்.
அப்போது, இல்லத்தின் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். கருணாநிதி இல்லத்திற்கு முன் கூடியிருந்த தொண்டர்களை சந்தித்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார். இதனால், திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், கருணாநிதியுடன் தொண்டர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

