நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்

 நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என  முதல்வர் ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதற்கு மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்  “ மாணவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை. நீட் தேர்வு தாள்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது இந்த மாதம் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். தாலியை கழற்றி வைத்து விட்டு தேர்வு எழுதும் கொடுமை நடந்துள்ளது” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா" என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக வே காரணம் என ஆவேசமாக பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com