திமுகவின் மனிதச்சங்கிலி போராட்டம் நியாயமானது: வைகோ

திமுகவின் மனிதச்சங்கிலி போராட்டம் நியாயமானது: வைகோ
திமுகவின் மனிதச்சங்கிலி போராட்டம் நியாயமானது: வைகோ
Published on

திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டம் மாணவர்களின் நலனுக்காக நடத்தக்கூடிய நியாயமான போராட்டம் என்றும், அது சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கைக் கண்டித்திருக்கிறேன். அவர்கள் நடத்துவது மக்கள் நலனுக்கான, மாணவர்களின் நலனுக்கான போராட்டம், மிகவும் நியாயமான போராட்டம். எனவே அது சிறப்பாக நடக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “தமிழகத்தின் காவிரிப் படுகையை பாலைவனமாக்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்தில் செயல்படுவதாக மத்திய அரசின் மீது நான் குற்றம்சாட்டுகிறேன். கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் 45 கிராமங்கள் அழிந்துவிடும். கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன், மெரினாவில் நினைவேந்தல் போராட்டம் நடத்திய திருமுருகன் காந்தி, சேலம் மாணவி வளர்மதி ஆகியோர் மீது பொய்யான வழக்குகளையும், அடக்குமுறை சட்டங்களை ஏவுவதும் பாசிச ஆட்சி என்பதற்கான குறியீடு. தமிழர்களின் தலையில் கொள்ளி வைக்க மத்திய அரசு வருகிறது. தமிழக அரசு அதற்கு வழிவிடுகிறது” என்று வைகோ கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com