வீல் சேரில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வீல் சேரில் வந்து வாக்களித்தார்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப் பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை ஏழு மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பொதும க்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மயிலாப்பூர் பகுதி யில் உள்ள வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்தார்.