டிரெண்டிங்
வீரபாண்டி ஆறுமுகம் உறவினர்களுக்கு ரஜினிகாந்த் மன்றத்தில் பதவி
வீரபாண்டி ஆறுமுகம் உறவினர்களுக்கு ரஜினிகாந்த் மன்றத்தில் பதவி
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் ஆட்சிக்காலத்தில் 3 முறை வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் திமுகவின் சேலம் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த 2012ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவருடைய நெருங்கிய உறவினர்கள் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நீலா ஜெயகுமார் மற்றும் டாக்டர் இளவரசன் ஆகியோர், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் உறவினர்கள் ஆவர். உறவு முறையில் ராஜாவின் மூத்த சம்மந்தி இளவரசன் மற்றும் இரண்டாவது சம்மந்தி நீலா ஜெயகுமார்.