கருணாநிதியின் விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக கூறி மு.க.அழகிரி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும் கருணாநிதியின் விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக மு.க.அழகிரி கூறியிருப்பதாலும் இந்த கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.