வகை வகையான வாட்ஸ்அப் பிரச்சாரம் - தீவிரம் காட்டும் திமுக

வகை வகையான வாட்ஸ்அப் பிரச்சாரம் - தீவிரம் காட்டும் திமுக

வகை வகையான வாட்ஸ்அப் பிரச்சாரம் - தீவிரம் காட்டும் திமுக
Published on

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மூலமும் திமுக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியோடு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. இதனிடையே விளம்பரங்கள் மூலமாக டிவி, ரேடியோ, யுடியூப், ட்விட்டர் உள்ளிட்டவற்றிலும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மூலமும் திமுக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

திமுக தங்களின் தேர்தல் வாக்குறுதிகளின் குறிப்பிட்டவற்றை வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மூலமாக வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறது. உதாரணத்திற்கு கல்விக்கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவரங்களை வாஸ்ட்அப் ஸ்டிக்கர் ஆக அதன்மூலம் வாட்ஸ்அப்பில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகனுக்கும் வாஸ்ட்அப் ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரை கவரும் விதமாக திமுக இதனை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

வாட்ஸ்அப் இன்று அனைத்து மக்களிடத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் உலக அளவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மூலம் திமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com