திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்..!

திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்..!

திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்..!
Published on

திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. ஆளும் அதிமுக விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ள நிலையில், திமுக சார்பில் விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. 1000 ரூபாய்க்கு வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பதை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1-ம் தேதி காலை 10 மணி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்வோருக்கு அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com