டிரெண்டிங்
சாலையோரம் வசித்த மூதாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த திமுக கவுன்சிலர்!
சாலையோரம் வசித்த மூதாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த திமுக கவுன்சிலர்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவைக்காவூர் பகுதியில் 65 வயது மூதாட்டியான துளசி என்பவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த மண் குடிசை வீட்டின் கூரை பெயர்ந்தும், சுவர் சிதிலமடைந்தும் வெட்டவெளியாக மாறியுள்ளது.
இதனால் கடந்த இரண்டு வருடங்களாக சாலையோரமாகவும் வீட்டோரங்களிலும் வசித்து வந்துள்ளார் துளசி. இவரின் மகன்கள், உறவினர்கள் இருந்தும் யாரும் இவரை கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் துளசியின் நிலையறிந்த தி.மு.க.வை சேர்ந்த பாபநாசம் ஒன்றியக் கவுன்சிலர் ராம விஜயன் அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.
துளசி வசித்து வந்த வீட்டை கற்சுவர், சிமென்ட், மூங்கில் கீற்றுகளை கொண்டு, ரூ.25 ஆயிரம் மதிப்பில் தனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். ராம விஜயனின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

