திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்

திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்

திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறவழியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கின்றனர். இதனிடையே முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவளித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். முழு அடைப்புக்கு ஆதரவாக சென்னையில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு வரை ஆட்டோக்கள் ஓடாது என்று சிஐடியு தெரிவித்துள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை,  தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com