டிரெண்டிங்
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறார் மு.க.ஸ்டாலின்!
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறார் மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார், திமுக தலைவர் ஸ்டாலின்.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்டாலின், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
1984-ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இம்முறை 9-ஆவது முறையாக களம் காண்கிறார்.