\
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பேரூராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பேரூராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பேரூராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே
Published on: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 9.15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 216 பேரூராட்சிகளில் முன்னிலை நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதில் 155 பேரூராட்சி வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 32 வார்டுகளிலும், அதிமுக 23 வார்டுகளிலும், பாஜக 3 வார்டுகளிலும், அமமுக 2 வார்டுகளிலும், நாம் தமிழர் கட்சி 1 வார்டிலும் முன்னிலை வகிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com