பெண்கள் குறித்த ஐ.லியோனி பேச்சு: வருத்தம் தெரிவித்த திமுக வேட்பாளர்

பெண்கள் குறித்த ஐ.லியோனி பேச்சு: வருத்தம் தெரிவித்த திமுக வேட்பாளர்
பெண்கள் குறித்த ஐ.லியோனி பேச்சு: வருத்தம் தெரிவித்த திமுக வேட்பாளர்

பிரச்சாரத்தின்போது ஐ.லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோவை, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, லியோனி பெண்கள் குறித்து பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. பலர் கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரசாரத்தின்போது ஐ.லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டுமாட்டு பால் நல்லது என கூறியிருக்கலாம். அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com