39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக

39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக
39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை கைப்பற்றியது திமுக

39 ஆண்டுகளுக்குப் பின் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 21 சுற்றுகள் முடிவில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 5,50,905 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 59,545, நாம் தமிழர் வேட்பாளர் சானுஷா 31,399 அமமுக வேட்பாளர் முத்துகுமார் 26,631 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு இந்தத் தொகுதியில் 15,068 வாக்குகள் கிடைத்துள்ளன.

39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 1980 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு அதிமுக 6 முறையும், மதிமுக இரண்டு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com