\
“எங்களுக்கு சவாலே கிடையாது” - முதல்வரை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் பேட்டி

“எங்களுக்கு சவாலே கிடையாது” - முதல்வரை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் பேட்டி

“எங்களுக்கு சவாலே கிடையாது” - முதல்வரை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் பேட்டி
Published on: 

எங்களுக்கு சவாலே கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேசிய திமுக வேட்பாளர் சம்பத்குமார்“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார் எடப்பாடி. அவரால் வேலைவாய்ப்பை கூட ஏற்படுத்தி தரமுடியவில்லை. கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்ட மக்கள் வரைக்கும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அறிக்கை மட்டுமே வரும். எந்தவொரு செயல்பாடும் இல்லை. எங்கள் தலைவரின் சாதனையை சொன்னாலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம். எங்களுக்கு சவாலே கிடையாது” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com