\
மீண்டும் தள்ளிப்போகிறது...திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு?

மீண்டும் தள்ளிப்போகிறது...திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு?

மீண்டும் தள்ளிப்போகிறது...திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு?
Published on

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், நாளை வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே திமுக தரப்பிலிருந்து மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், சிபிஎம்-க்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கட்சிகள் விரும்பிய தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிகள் இறுதியாவதில் இழுபறி நீடிப்பதாகவும், எனவே வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பட்டியல் நாளை வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை பொறுத்தவரை 173 இடங்களிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 இடங்களிலும் போட்டிடுகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com