\
”அரசியலுக்கு புதுசு, அதான் நிர்வாகிகள் பேச தெரியல”- பரப்புரையில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்

”அரசியலுக்கு புதுசு, அதான் நிர்வாகிகள் பேச தெரியல”- பரப்புரையில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்

”அரசியலுக்கு புதுசு, அதான் நிர்வாகிகள் பேச தெரியல”- பரப்புரையில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்
Published on

”அரசியலுக்கு புதுசுங்க, அதான் நிர்வாகிகள் பெயர்கள் கூட தெரியல, கொஞ்சம் கேட்டு கேட்டே சொல்லுவோம்” என பரப்புரையில் திமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஓப்பனாக பேசினார்.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனர் தலைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகின்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனத் தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் தொடங்கிய முதலே திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியையும், அவருக்குப் பிறகு ஸ்டாலினையும் சிறப்பு விருந்தினராக அழைத்து கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.

திமுகவில் பெரிய அளவில் கட்சிப் பணி அனுபவம் இல்லாத இவருக்கு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நத்தர்ஷா பள்ளிவாசல்,மன்னார்புரம், இ.பி.ரோடு, ஓம்சக்தி வேல்முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இவர் அரசியலுக்கு புதுசு என்பதால் பரப்புரையில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவதோடு, உடன் வரும் கட்சிக்காரர்கள் யார் என்று தெரியவில்லை என்பதால், ”அரசியலுக்கு புதுசுங்க, அதான் நிர்வாகிகள் பெயர்கள் கூட தெரியல, கொஞ்சம் கேட்டு கேட்டே சொல்லுவோம்” என  வெளிப்படையாக பேசினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com