டிரெண்டிங்
ஈரோடு: மாரடைப்பு ஏற்பட்டு திமுக வேட்பாளர் உயிரிழப்பு
ஈரோடு: மாரடைப்பு ஏற்பட்டு திமுக வேட்பாளர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அத்தாணி பேரூராட்சியில் 3ஆவது வார்டில் திமுக சார்பில் ஐயப்பன் என்பவர் போட்டியிட்டார். வீட்டிலிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்தனர். வேட்பாளர் உயிரிழந்ததால் 3ஆவது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.