தேர்தல் பணிகளை கவனிக்க திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்!

தேர்தல் பணிகளை கவனிக்க திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்!
தேர்தல் பணிகளை கவனிக்க திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்!

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொமுச பேரவையின் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான சண்முகம், மத்திய மண்டலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எம்.பியும், திமுக மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி, தெற்கு மண்டலத்துக்கு பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.

எம்.பி ஜெகத்ரட்சகன் வடக்கு மண்டலத்துக்கும், எம்.பி தயாநிதிமாறன் மேற்கு மண்டலத்துக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com