தேர்தல் விதி மீறில்: திமுக அதிமுக தொண்டர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

தேர்தல் விதி மீறில்: திமுக அதிமுக தொண்டர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
தேர்தல் விதி மீறில்: திமுக அதிமுக தொண்டர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக ,திமுக தொண்டர்கள் மீது எட்டு காவல் நிலையங்களில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் உத்திரமேரூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் வி.சோமசுந்தரம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுக சார்பில் உத்தரமேரூர் தொகுதி வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முதல் நாளே உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியையும் மீறி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரு வேட்பாளர்களும் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் வகையில் நெருக்கமான இடத்தில் அதிக அளவு மக்களை ஒன்றுகூட செய்ததாகவும் கூறி சாலவாக்கம் காவல் நிலையத்தில் இரு கட்சிச் சேர்ந்த சுமார் 400 தொண்டர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் திமுக மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக முதல்நாளிலேயே உத்திரமேரூர் சாலவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதேபோல் அதிமுக மீது பெருநகர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சாலவாக்கம் ,காஞ்சி தாலுகா மற்றும் மாகறல் ஆகிய ஆறு காவல் நிலையத்தில் தேர்தல் விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com