187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: திமுகவின் வியூகம்

187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: திமுகவின் வியூகம்
187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: திமுகவின் வியூகம்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 174 பேரும், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் களம் காண்கின்றனர்.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. அதிலிருந்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 187 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத ஒன்று. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதில், மதிமுக 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் களம் காண இருக்கிறது. அதனைத்தொடர்ந்து கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கி கையெழுத்தானது.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுகவுக்கு 174 தொகுதிகள். இதில் கூட்டணி கட்சியினர் 13 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. இதன்பிறகு சில கட்சிகள் அல்லது அமைப்புகளுக்கு திமுக சீட் கொடுத்தாலும் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்பதால் 187 என்ற எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com