அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு
Published on

உள்ளாட்சித்துறை‌ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து சிறப்பு புலன் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உறவினர்களுக்கு உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி‌ ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஆனால் புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

942 கோடி ரூபாய் உபரி வருவாய் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி தற்போது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் புகார் குறித்து சிறப்பு புலன் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ள‌து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com