\
அனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு

அனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு

அனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு
Published on: 

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் கூறியுள்ளார். 

சென்னை எம்.ஜி.ஆர் நகர் நடைபெற்ற தேமுதிக பொதுகூட்டத்தில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இங்கே இருகின்ற பெண்கள் மற்றும் ஆண்களை பார்க்கும் போது எங்க அம்மா, அப்பாவை பார்ப்பதை போல் இருகிறது. தேமுதிக கொடி நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

விஜயகாந்த் நலமாக இருகிறார். விஜயகாந்த் வரும்போது விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு இருக்கும். அவர் எப்போது வருகிறார் என்பதை தலைமைக் கழகம் அறிவிக்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கோவப்படுகிறார். ஆனால் விஜயகாந்த் கட்சி தொண்டர்களை அடித்தால் அது பெரிதுபடுத்தப்படுகிறது. திமுக 89 சீட்டு வைத்து இருந்தாலும் அது கூஜாதான். வரும் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி உயரும். கூட்டணிக்காக மறைமுகமாக காலில் விழுந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com