டிரெண்டிங்
“வார்த்தைகளை அளந்து பேசவும்... என்னாலும் வெளுத்து கட்ட முடியும்” - ஜெயக்குமார் காட்டம்
“வார்த்தைகளை அளந்து பேசவும்... என்னாலும் வெளுத்து கட்ட முடியும்” - ஜெயக்குமார் காட்டம்
பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது தேமுதிக சேற்றை வாரி இறைக்கக்கூடாது என்றும் தன்னாலும் வெளுத்துக்கட்ட முடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து இழுபறியுடன் அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், அதிமுக-பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக இன்று அறிவித்தது. இதன்பின்னர் தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் அதிமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ கூட்டணியிலிருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது தேமுதிக சேற்றை வாரி இறைக்கக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.