அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் - கையெழுத்தானது ஒப்பந்தம்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் - கையெழுத்தானது ஒப்பந்தம்
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் - கையெழுத்தானது ஒப்பந்தம்

சென்னை தனியார் ஹோட்டலில் அதிமுக, தேமுதிக இடையே தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது. பாமக 7, பாஜக 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. 

முதலில் பாஜகவுடன் தேமுதிக நேரடியாக பேசி வந்தது. பின்னர், திமுக மற்றும் அதிமுக இரண்டு கூட்டணிகளுடனும் தேமுதிக பேசி வருவதாக பிரேமலதா தெரிவித்தார். திமுக, அதிமுகவில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், தேமுதிக மட்டும் எவ்வித முடியும் எடுக்காமல் இருந்து வந்தது. 

திமுக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிறகு, அதிமுக தேமுதிக இடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இருப்பினும் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டே சென்றது. கடந்த 6ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திலும் தேமுதிக கலந்து கொள்ளவில்லை. அன்று எப்படியும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. 

இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், தேமுதிக சார்பில் விஜயகாந்த் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com