\
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Published on

பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து, வரும் 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு திடீரென்று வரலாறு காணாத அளவிற்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் பேருந்தில் பயணிப்பதை கேள்விக்குறியாக்கி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டதை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் தேமுதிக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com