\
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் இன்று ஆலோசனை
Published on

விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

முன்னணி நடிகர் விஜய், தனது ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர். அடுத்த மாதம் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை நடிகர் விஜய் ஆதரித்து ஊக்குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்தக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com