\
கருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்

கருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்

கருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்
Published on

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஈச்சன்விளை பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செய்த பின், இரவில் மர்ம நபர்கள் அந்த படத்தை சேதப்படுத்தி அவமரியாதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அந்த பகுதியில் குவியத் தொடங்கியதால் பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இதனையடுத்து திமுகவினர் ஏராளமானோர் குலசேகரம் காவல் நிலையத்தில் திரண்டு அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களிடம் புகாரினைப் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com