குடகு விடுதியிலிருந்து சென்னை திரும்பியவர்கள் தினகரனுடன் சந்திப்பு

குடகு விடுதியிலிருந்து சென்னை திரும்பியவர்கள் தினகரனுடன் சந்திப்பு

குடகு விடுதியிலிருந்து சென்னை திரும்பியவர்கள் தினகரனுடன் சந்திப்பு
Published on

எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் குடகு விடுதியிலிருந்து சென்‌னை திரும்பினர். அவர்கள் தினகரனை சந்தித்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றனர்.

இன்று காலை சென்னை வந்த ரங்கசாமி, தங்கதுரை, சுப்ரமணியன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 10க்கு‌ம் மேற்பட்டவர்கள், சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்தனர். பின்னர், அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்றனர். 

தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகில் இருந்த விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்தனர். அதற்கு முன்பு புதுச்சேரியில் தங்கியிருந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com