காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர்கள் பாரதிராஜா உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றும் பரவலான பேச்சுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர்கள் பாரதிராஜா உள்ளிட்டோர் முதலமைச்சர் சந்தித்து பேசியுள்ளனர். முதலமைச்சர் இல்லத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சேகர், தங்கர்பச்சான், அமீர் உள்ளிட்டார் சந்தித்து பேசியுள்ளனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது எனவும் அவர்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

