டிரெண்டிங்
தினகரனையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
தினகரனையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரிக்கும் நிலையில் கருத்து கூறும் டிடிவி தினகரனையும், திவாகரனை கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவை வைத்து விளம்பரம் தேடக்கூடிய மலிவான செயலை டிடிவி தினகரனும், திவாகரனும் செய்து வருகின்றனர்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தினகரன் தரப்பினர் வீடியோ வெளியிட்டும், திவாகரன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்து மலிவான அரசியல் விளம்பரம் தேடுகின்றனர்.ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரிக்கும் நிலையில் கருத்து கூறும் திவாகரனையும், தினகரனையும் கைது செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் எனத் தெரிவித்தார்.