டிரெண்டிங்
ஒன்றாம் தேதியானால் குடும்பத் தலைவியின் கணக்கில் ரூ.1500 வந்துவிடும்: திண்டுக்கல் சீனிவாசன்
ஒன்றாம் தேதியானால் குடும்பத் தலைவியின் கணக்கில் ரூ.1500 வந்துவிடும்: திண்டுக்கல் சீனிவாசன்
கணவர் வெளியூர் போய் இருந்தாலும் கவலைபடாதீங்க. அரசு 1500 ரூபாய் தருகிறது என திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பரப்புரையில் பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை தெடங்கிய வனத்துறை அமைச்சரும் திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன், குமரன் திருநகர் பகுதியில் பரப்புரையை துவங்கினார். அப்போது திறந்த வாகனத்தில் நின்றபடி மக்கள் மத்தியில் பேசும்போது,
"வீட்டிலுள்ள தாய்மார்கள், வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்காருன்னு கவலையேபடாதீர்கள். அரசு 1,500 ரூபாயை ஒன்றாம் தேதியானால் உங்கள் குடும்பத் தலைவியின் கணக்கிற்கு வந்துவிடும். இதேபோல் கல்விக்கு வாங்கிய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என பேசினார்.