தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெச்.ராஜா விமர்சனம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கட்சிகள், பலத்தரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா டிடிவி தினகரன் ஆர்.கேநகரில் வெற்றி பெற்றது குறித்து விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மேற்பனைக்காடு என்ற இடத்தில் பேசிய அவர், ஆர்.கே.நகர் விவகாரத்தில் நாளைகூட டைம்பாம் வெடிக்கலாம் என கூறப்படுவதாகவும் சூசகமாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது எனவும், ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 234 தொகுதிகளிலும் இதுபோன்று செய்ய முடியாது எனவும் ஹெ.ச் ராஜா தெரிவித்துள்ளார்.