\
அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு?

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு?

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு?
Published on

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டிடிவி தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக பிரிந்து அமமுக என்ற அமைப்பை உருவாக்கினார். மேலும் அதிமுகவை மீட்டே தீருவோம் என தெரிவித்தார். 

எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை மறுக்கவே நீதிமன்றத்தை நாடினார் தினகரன். அப்போது பதில் அளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பதிவுசெய்யவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் அவர் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அமமுகவை கட்சியாக பதிவு செய்த பிறகு அதன் பொதுச்செயலாளராகிறார் டிடிவி. 

அடுத்த மாதம் மேலும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருக்கிறது என்பதால் டிடிவி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com