42 அடிக்கு நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை.. சோக பின்னணியை பகிர்ந்த அமெரிக்க பெண்!

42 அடிக்கு நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை.. சோக பின்னணியை பகிர்ந்த அமெரிக்க பெண்!

42 அடிக்கு நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை.. சோக பின்னணியை பகிர்ந்த அமெரிக்க பெண்!
Published on

விநோதமான அம்சங்களை கொண்ட மக்கள் பலரும் கின்னஸ் சாதனை பட்டியலில் இணைந்து வருவது வாடிக்கைதான். அதேபோல, கைவிரல்களில் நீண்ட நெடிய நகங்களை வளர்த்து வரும் அமெரிக்காவில் வசிக்கும் டையானா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற பெண்ணும் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.

சுமார் 24 ஆண்டுகளாக தனது இரண்டு கைகளில் உள்ள விரல்களிலும் 1,306.58 செண்டி மீட்டர் அளவுக்கு நகத்தை வளர்த்து வந்திருக்கிறார் டையானா ஆர்ம்ஸ்ட்ராங். 42 அடி 10 அங்குலம் கொண்ட நகங்களுக்கு டையானா தினந்தோறும் நெயில் பாலிஷ் போட்டு அதனை அலங்கரித்தும் வருகிறாராம்.

இத்தனை பெரிய நகங்களை வளர்ப்பதற்கு பின்னணியில் டையானாவின் மறைந்த மகளின் நினைவுதான் காரணம் என்றும் அவர் உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டிருக்கிறார்.அதன்படி கடந்த 1997ம் ஆண்டு டையானாவின் 15 வயது மகள் தூங்கும் போது ஆஸ்துமா பாதிப்பால் இறந்திருக்கிறார்.

அவர் இறப்பதற்கு முந்தைய நாள்தான் டையானாவின் விரல் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுவிட்டதால் அதனை வெட்ட மனம் வராமல் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.

ஆனால் டையானாவிடம் நகங்களை வெட்டுமாறு அவரது மற்ற பிள்ளைகள் கூறிய போதும் அவர் அதை வெட்ட முடியாது என தீர்க்கமாக கூறியதோடு , அதன் நினைவலைகளையும் எடுத்து சொல்லியிருக்கிறாராம். அதன் பிறகு அவரை வற்புறுத்துவதையும் நிறுத்திவிட்டோம் என டையானாவின் மகள் ரானியா தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த அறிந்து கின்னஸ் தரப்பில் இருந்து கடந்த மார்ச் 13ம் தேதி அதிகாரப்பூர்வமாக டையானா கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com