மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி! டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு!

மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி! டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு!
மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி! டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பவுலிங் தேர்வு!

தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ள நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பை துறந்த மகேந்திர சிங் தோனி, அதை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சோபிக்காத சென்னை அணி இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறி கேப்டன் பொறுப்பை தோனியிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார் ஜடேஜா. இந்தநிலையில் புனேவில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் களம் இறங்குகிறது.

சன் ரைசரஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டி முதல் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்று முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் சென்னை அணி உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக சென்னை அணியை வழிநடத்தியோடு, 4 முறை கோப்பையையும் பெற்று தந்துள்ள தோனி அந்த மாயாஜாலத்தை மீண்டும் செய்வாரா என சென்னை அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மறுபக்கம் சன் ரைசர்ஸ் அணி அனல் பறக்கும் ஃபார்மில் இருக்கிறார்கள். முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்று சென்னை, மும்பை அணிகளோடு விமர்சனம் செய்யப்பட்ட சன் ரைசர்ஸ், சென்னைக்கு எதிராக தன் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின் அனைத்து போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியது. 5 தொடர் வெற்றிகளுக்கு பின், குஜராத்திடம் கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்தது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முழு முனைப்புடன் அந்த அணி களமிறங்க உள்ளது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, சிமர்ஜீத் சிங், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா

சன் ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com