தினகரின் ஜோதிடர் சந்திரசேகர் நவம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரில் வசித்து வருபவர் பிரபல ஜோதிடர் சந்திரசேகர். தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமான ஜோதிடராக சந்திரசேகர் இருந்து வருகிறார். கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் கடலூரில் உள்ள இவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து நவம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஜோதிடர் சந்திரசேகருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. புதுச்சேரி வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.