தருமபுரி: வாக்காளர்களுக்கு கொலுசு வழங்கியதாக திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

தருமபுரி: வாக்காளர்களுக்கு கொலுசு வழங்கியதாக திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

தருமபுரி: வாக்காளர்களுக்கு கொலுசு வழங்கியதாக திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு
Published on

அரூரில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.கவினர் வெள்ளி கொலுசு வழங்கியதாக, தி.மு.கவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் உமாராணியும், அ.தி.மு.க. சார்பில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். நேற்றிரவு தில்லைநகர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்ற அ.தி.மு.க.வினர் வெள்ளி கொலுசு வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த திமுக வேட்பாளர் உமாராணி, அதனை தடுத்து பிடுங்கியுள்ளார். அப்போது தம்மை தாக்கி, கீழே தள்ளி விட்டு வெள்ளி கொலுசுடன் அதிமுகவினர் ஓடி விட்டதாக, அரூர் காவல் நிலையத்தில் தி.மு.க. வேட்பாளர் உமாராணி புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, நான்குரோட்டில் உள்ள அ.தி.மு.க நகர ஜெ பேரவை செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது ஆத்திரமடைந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்ததில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் இல்லை. இதனையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரூர் பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com