\
55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் - தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று டிஜிபி திரிபாதி உத்தரவு

55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் - தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று டிஜிபி திரிபாதி உத்தரவு

55 காவல் அதிகாரிகள் இடமாற்றம் - தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று டிஜிபி திரிபாதி உத்தரவு
Published on

தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் உதவி ஆணையர்கள் 55 பேர் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி திரிபாதி அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டுவருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக சென்னை, தி.மலை, சேலம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் உட்பட மற்ற மாவட்டங்களின் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு 277 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து திரிபாதி உத்தரவிட்டிருந்தார். தற்போது தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் உதவி ஆணையர்கள் 55 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com