மனம் மாறிய தேவகவுடா துமகூரு தொகுதியில் போட்டி!

மனம் மாறிய தேவகவுடா துமகூரு தொகுதியில் போட்டி!
மனம் மாறிய தேவகவுடா துமகூரு தொகுதியில் போட்டி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்த முன்னாள் பிரதமரும் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவரு மான தேவகவுடா, இப்போது துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 20 தொகுதிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹாசன் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா போட்டியிட்டு வந்தார். இப்போது அந்த தொகுதியில் அவர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இதனால் அவர், துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

(முத்தஹனுமா கவுடா)

இதன் காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி. முத்த ஹனுமே கவுடா, அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில், தும்கூரு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக ஹனுமே கவுடாவும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்தும் வேலையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com