டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. டிடிவி தினகரன் அணியும் அதே கருத்தை தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் உடனான தம்பிதுரையின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராம்நாத் கோவிந்துடன் தம்பிதுரை பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.