முதலமைச்சர் பழனிசாமியை நலம் விசாரித்த துணை முதலமைச்சர்!

முதலமைச்சர் பழனிசாமியை நலம் விசாரித்த துணை முதலமைச்சர்!
முதலமைச்சர் பழனிசாமியை நலம் விசாரித்த துணை முதலமைச்சர்!

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது சென்னை அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி உடனிருந்தார். அன்றைய தினமே வீடு திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி ஓய்வில் உள்ளார். 

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அத்துடன் கண்ணின் நிலை குறித்தும், கண்ணின் நிலை குறித்தும் சிலவற்றை பேசினார். இதற்கிடையே கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர், விரைந்து பூரண குணமடைய ஆளுநர் பன்வாரிலாலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துகொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com