\
கோயம்பேடு சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு

கோயம்பேடு சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு

கோயம்பேடு சந்தையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் ஆய்வு
Published on

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்பேடு வியாபாரிகளிடம் கலந்துரையாடிய துணை முதலமைச்சர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து நேரில் தெரிந்து கொள்வதற்காக இந்த பகுதியில் ஆய்வு நடத்தியதாக தெரிவித்தார். மேலும் இங்குள்ள வியாபாரிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அவர்களிடமே நேரில் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். 

கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஓய்வு எடுக்க தனி இடம் போன்ற பல்வேறு தேவைகள் குறித்து வியாபாரிகள் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், தமிழக அரசு விரைவில் இங்கு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தரும் என்று உறுதியளித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com