டிரெண்டிங்
மோடியின் சூதாட்டத்தால் பொருளாதாரம் பாதிப்பு: ப.சிதம்பரம்
மோடியின் சூதாட்டத்தால் பொருளாதாரம் பாதிப்பு: ப.சிதம்பரம்
பிரதமர் மோடியின் சூதாட்டத்தினால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது நெறிமுறை சார்ந்த நடவடிக்கை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதை தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டிய சிதம்பரம், 15 கோடி தினக்கூலிகளை துயரத்தில் ஆழ்த்துவதுதான் நெறிமுறையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சிறு, குறு தொழில்களை நசுக்குதும், திருப்பூர், சூரத், ஆக்ரா உள்ளிட்ட தொழில் நகரங்களை பாதிப்படையச் செய்வதும் சரிதானா என்றும் வினவியுள்ளார். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற எளிதான திட்டத்தை கண்டுபிடித்திருப்பது நெறிமுறையான நடவடிக்கையா என பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.