Fact Check: வெறும் ரூ.655 தான் டிப்ஸா? கஸ்டமரிடம் சண்டையிட்ட டெலிவரி பெண்! வைரல் வீடியோ

Fact Check: வெறும் ரூ.655 தான் டிப்ஸா? கஸ்டமரிடம் சண்டையிட்ட டெலிவரி பெண்! வைரல் வீடியோ
Fact Check: வெறும் ரூ.655 தான் டிப்ஸா? கஸ்டமரிடம் சண்டையிட்ட டெலிவரி பெண்! வைரல் வீடியோ

655 ரூபாய் டிப்ஸ் கொடுத்தும் வாடிக்கையாளரிடம் சண்டையிட்டு, டெலிவரி செய்ய வந்த உணவை டோர் டேஷ் ஊழியர் திருப்பி கொண்டு சென்றிருக்கிறார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அதன்படி, 40 நிமிடங்கள் பயணித்து உணவை டெலிவரி செய்த பெண் ஊழியருக்கு வெறும் 8 டாலரை (ரூ.655) டிப்ஸாக கொடுத்ததால் அதிருப்தி அடைந்தவர் உணவை திருப்பி எடுத்துச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக அந்த பெண் டெலிவரி ஊழியர், வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் நின்றபடி எதிர்கொண்ட நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. அதில், காலிங் பெல் அடித்த டெலிவரி ஊழியரிடம் வீட்டுக்கு வெளியே உணவு பார்சலை வைக்கும் படி வாடிக்கையாளர் சொல்ல, ஆனாலும் அந்த பெண்ணுக்கு வாடிக்கையாளரிடம் பேச வேண்டி இருந்ததால் பேச்சை தொடர்ந்திருக்கிறார்.

ஏனெனில் வெகு தொலைவில் இருந்து உணவை டெலிவரி செய்ய வந்தவருக்கு வெறும் 8 டாலர் மட்டும் டிப்ஸாக கொடுத்ததை அந்த ஊழியரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் கூடுதலாக டிப்ஸ் கேட்டிருக்கிறார். இதற்கு, 15 முதல் 20 நிமிட தொலைவில் இருந்துதான் வந்திருப்பீர்கள். இதற்கு 8 டாலர் போதவில்லையா என வாடிக்கையாளர் கேட்க, “கிட்டத்தட்ட 20.1 கிலோமீட்டர் பயணித்து வந்திருக்கிறேன். 40 நிமிடங்கள் ஆனது இங்கு வருவதற்கு. இதற்கு வெறும் 8 டாலர் எப்படி போதுமானதாக இருக்கும்?” எனக் கேட்டு டெலிவரி ஊழியர் முறையிட்டிருக்கிறார்.

தொலைவில் இருந்தால் ஏன் ஆர்டரை எடுக்க வேண்டும்? என வாடிக்கையாளர் கேட்க, நேரில் வந்தால் கூடுதல் டிப்ஸ் கொடுப்பீர்கள் என எண்ணியே வந்தேன் என்றிருக்கிறார். இந்த ஆர்டருக்கு 8 டாலரே அதிகம் என வீட்டில் இருந்த வாடிக்கையாளர் சொல்ல இப்படியாக இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் தொடர்ந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த டெலிவரி ஊழியர், கடுப்பில் கொண்டு வந்த ஆர்டரை எடுத்துச் சென்றிருக்கிறார். இதனையடுத்து வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அந்த பெண் டெலிவரி ஊழியரை வேலையில் இருந்தே நீக்கியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோ டிரைவர் மேன் என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டு 15 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டும் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்வு நடந்தது என்னவோ கடந்த 2020ம் ஆண்டு. இது குறித்த வீடியோ கடந்த 2020 டிசம்பர் 30ம் தேதியே யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் மீண்டும் இந்த நிகழ்வு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் தற்போது இது பேசுபொருளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com