\
”வாங்க வாங்க உங்களுக்காகதான் காத்திருக்கோம்” ஃபுட் டெலிவரி Boy-க்கு ஆரத்தி எடுத்த கஸ்டமர்!

”வாங்க வாங்க உங்களுக்காகதான் காத்திருக்கோம்” ஃபுட் டெலிவரி Boy-க்கு ஆரத்தி எடுத்த கஸ்டமர்!

”வாங்க வாங்க உங்களுக்காகதான் காத்திருக்கோம்” ஃபுட் டெலிவரி Boy-க்கு ஆரத்தி எடுத்த கஸ்டமர்!
Published on

ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வதில் பல்வேறு குளறுபடிகள், தாமதங்கள், சச்சரவுகள் நடப்பது தொடர்ந்து வருவது சமூக வலைதளங்கள் வாயிலாக அம்பலமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லியில் ஸொமேட்டோ செயலி மூலம் சஞ்ஜீவ் குமார் என்பவர் தான் ஆர்டர் செய்த உணவு வர கிட்டத்தட்ட 1 மணிநேரத்துக்கு மேல் தாமதமாகியிருக்கிறது.

வெகுநேரமாக காத்திருந்த சஞ்ஜீவ் குமாரும் அவரது குடும்பத்தாரும் டெலிவரி ஊழியர் வந்ததும் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார். இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

டெல்லியில் நடந்த இந்த நிகழ்வு குறித்த வீடியோவில் சஞ்ஜீவ் தனது வீட்டு வாசல் முன்பு டெலிவரி ஏஜெண்டிற்காக ஆரத்தியோடு காத்திருந்திருக்கிறார். ஸொமேட்டோ ஊழியர் வந்ததும் அவருக்கு ஆரத்தி எடுத்து பொட்டொ வைத்து வரவேற்றிருக்கிறார்கள். அப்போது உங்களுக்காகதான் காத்திருக்கிறோம் என்று டெலிவரி பாயிடம் கூறியிருக்கிறார்கள்.

இது குறித்த சஞ்ஜீவ் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவில், “டெல்லி டிராஃபிக் இருந்தபோதும் இந்த ஆர்டருக்காகதான் காத்திருந்தோம். நன்றி ஸொமேட்டோ” என கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் மேலானோர் லைக் செய்தும் 2 மில்லியனுக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டும் இருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்தோடு மட்டுமல்லாமல், தாமதமாக வந்த டெலிவரி பாயை கண்டிக்காமல் ஆரத்தி எடுத்து வரவேற்றது பாரட்டத்தக்கது என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com